×

பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் சந்திப்பு

டெல்லி: 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் பிரசண்டா பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை நேபாள பிரதமர் பிரசண்டா சந்தித்துப் பேசினார். பல்வேறு துறைகளில் இருநாட்டு கூட்டுறவு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவரையும் நேபாள பிரதமர் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.

The post பிரதமர் மோடியுடன் நேபாள பிரதமர் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Modi ,Delhi ,Prasanda ,India ,Hyderabad ,Dinakaran ,
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி